இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் ராமேஸ்வரம் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் வீசப்பட்டதாகக் கூறப்படும் தங்கக்கட்டிகளைத் தேடும் பணித் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் – சினிமா மேக்கப் கலைஞர்
நள்ளிரவில் படகு ஒன்றை நிறுத்தி சோதனை செய்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதில் இருந்த அசாருதீன், சாதிக் அலி ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, இலங்கையில் இருந்து 8 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதன் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் என்று கூறிய அதிகாரிகள், தங்கக்கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல், சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மற்றொரு படகை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. கடத்தல் தங்கத்தைக் கடலில் வீசினார்களா என படகில் இருந்த மூன்று பேரைப் பிடித்து வருவாய், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கொரட்டூரில் 1.2 கோடி மோசடி- பாஜக பிரமுகர் உள்பட 2 பேர் கைது
மொத்தம் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படுவதால், நடுக்கடலில் தங்கத்தைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட 26 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.