Homeசெய்திகள்தமிழ்நாடுராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி!

ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி!

-

 

ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி!

அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 22 தீர்த்தங்களில் நீராடி வருகிறார். கடலில் நீராடிய பின்னர் பேட்டரி வாகனம் மூலம் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றார். கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தக் கிணறுகளில் நீராடிவிட்டு ராமர் பாதத்தைத் தரிக்க உள்ளார்.

ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, சிறிதுநேரம் தியானமும் செய்யவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில், அர்ச்சகர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதையை வழங்கினர்.

அதேபோல், கோயில் முன்பு கூடியிருந்த பொதுமக்கள், பா.ஜ.க.வினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு முழக்கங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சொந்த வாகனங்களை போன்று பொதுபோக்குவரத்துக்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்

அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் சென்று வழிபாடு நடத்தி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, ராமேஸ்வரத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புக் கருதி ராமேஸ்வரம் கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் சேவல் சண்டைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

இன்று (ஜன.20) இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் தங்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜன.21) மீண்டும் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டு, தனுஷ்கோடிக்கும் செல்லவிருக்கிறார்.

MUST READ