ரம்ஜான் பண்டிகை இன்று (ஏப்ரல் 11) உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தொடர் உச்சத்தில் தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்குகிறது!
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவில் ஈகைத் திருநாள் என்றழைக்கப்படுகிறது ரம்ஜான். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் மாலை வரை நோன்பு கடைப்பிடித்து ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது வழக்கம். வானில் தென்படும் பிறையின் அடிப்படையில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவில் இந்தாண்டு மார்ச் 12- ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. தமிழகத்தில் ரமலான் பிறை ஏப்ரல் 09- ஆம் தேதி தெரியாததால், இன்று (ஏப்ரல் 11) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இஸ்லாத்தில் மிக முக்கியமான மத விடுமுறையான இந்நாளில் இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடி வருகின்றனர்.
ரமலான் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள முக்கிய பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கு ரமலான் வாழ்த்துக்கள் – செல்வப்பெருந்தகை!
“நோன்பு இருப்பதைப் போன்று ஏழை, எளியவர்களுக்கு உதவுவதும் கடமையே; ரமலான் கொண்டாட்டத்தில் மதம் பார்க்கப்படுவதில்லை; மனிதநேயமே பிரதானம்” என்று இஸ்லாமியர்கள் தெரிவிக்கின்றனர்.