Homeசெய்திகள்தமிழ்நாடுரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைகள்!

ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைகள்!

-

 

ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைகள்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைக் களைகட்டியது. சிறப்பு ஆட்டுச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 1,000- க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்தனர்.

வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – அன்புமணி!

10,000- க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை காரணமாக, சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் ரூபாய் 2 கோடி வரை ஆடுகள் விற்பனையாகினர்.

“தங்கர்பச்சான் வெற்றி என்று ஜோதிடம் கூறிய கிளி ஜோதிடர் கைது”- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

காலை முதலே ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்ய குவிந்தனர். இதில் சிறிய ரக ஆடுகள் ரூபாய் 5,000- க்கும் பெரிய ரக ஆடுகள் ரூபாய் 50,000- க்கும் விற்பனை செய்யப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி ஒரு பக்கம் இருந்தாலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சுமார் 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

MUST READ