Homeசெய்திகள்தமிழ்நாடு"சர்க்கரை கார்டுதாரர், வருமான வரி செலுத்துவோர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்"- தமிழக அரசு விளக்கம்!

“சர்க்கரை கார்டுதாரர், வருமான வரி செலுத்துவோர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்”- தமிழக அரசு விளக்கம்!

-

 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
Photo: TN Govt

சர்க்கரை குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

களேபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடிய மக்களவை!

‘மிக்ஜாம்’ புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6,000 நிவாரணத் தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், சர்க்கரை குடும்ப அட்டைத்தாரர்கள், வருமான வரி செலுத்துவோர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம். மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவன அலுவலர்கள் பாதிப்பு விவரங்களைக் குறிப்பிட்டு, விண்ணப்பித்து நிவாரணம் பெறலாம்.

பொருட்கள் இழப்பு உள்ளிட்ட விவரங்களுடன் வங்கி கணக்கு எண்ணுடன் ரேஷன் கடையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் உரிய நிவாரணம் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும். ரூபாய் 6,000 நிவாரணம் பெற தகுதியானோருக்கு ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்படும்.

அத்துமீறிய நபர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் ரூபாய் 6,000 ரொக்கமாக வழங்கப்படுகிறது. மழையால் ஏடிஎம் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களை இழந்திருக்கக் கூடும் என்பதால் ரொக்கமாகத் தரப்படுகிறது.

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரணம் குறித்து அரசாணையில் எதுவும் இடம் பெறவில்லை.

MUST READ