ஆர்.பி.உதயகுமாரின் இருசக்கர வாகன பேரணி தடுத்து நிறுத்தம்
முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நடைபெறவிருந்த இருசக்கர வாகன பேரணி அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் துவக்கபட்டதால் காவல்துறை தடுத்து நிறுத்தியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் நான்கு வழிச்சாலையோரம் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தலைமையில், வருகிற இருபதாம் தேதி மதுரையில் நடைபெறுகின்ற அதிமுக எழுச்சி மாநாட்டிற்காக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தயார் செய்து, அவர் பேரணியை நடத்துவதற்கு முன்பு , நான்கு வழி சாலையிலேயே ஆர். பி. உதயகுமார் 30 நிமிடங்கள் வரை தலைமை ஏற்று பேசினார்.
இதனை தொடர்ந்து , இருசக்கர வாகனங்களில் அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் பேரணிக்காக புறப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி , விதிமுறைகளை (ஹெல்மெ ட் அணியாமல்) மீறியும், அனுமதி இன்றியும் பேரணி நடைபெறுவதை தடுத்து நிறுத்தியதுடன், முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமாரிடம் எச்சரித்தார் .இப்பேரணி விதிமுறைகளை மீறி அனுமதியின்றி நடத்தினால் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்வதுடன், வழக்குப் பதிவு செய்வேன் எனவும் எச்சரித்தார். இதனால் 20 நிமிடம் ஆர்.பி. உதயக்குமாருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் ஒவ்வொன்றாக பேரணியை ரத்து செய்துவிட்டு, அவரவர் இல்லத்திற்கு திரும்பிச் சென்றனர்.
இப்பேரணி ரத்து காரணமாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலக்கத்துடன் திரும்பினர்.