- Advertisement -
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் JN.1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 378 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.