வந்தவாசி அடுத்த ஸ்ரீ ரங்கராஜபுரம் கீழ் செப்பேடு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் இருப்பதால் நெல் கதிர்கள் அழுகி, நெல் நாற்றாக முளைத்து காணப்படுகிறது.
இதனால் விவசாயிகள் வேதனை அடைகின்றனர். வெள்ளத்தால் தார் சாலை அரித்து செல்லப்பட்டதால் அருகில் உள்ள விவசாய நிலத்தில் மணல், ஜல்லி மேடாக மூடி இருக்கும் நிலையில் உள்ளது. விவசாய நிலத்தை சரி செய்ய பல மாதங்கள் ஆகும் என்று விவசாயி மன வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.