சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்குமாறு கொலீஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், அதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 3 பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது. ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது.
இந்த பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் அடுத்தபடியாக குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரது அனுமதியை தொடர்ந்து 3 பேரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்பார்கள்.