Homeசெய்திகள்தமிழ்நாடுநிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

"கனிமொழி பேச்சால் அண்ணனாகப் பெருமைப்படுகிறேன்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: dmk

புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6,000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை வேளச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு சிறை!

‘மிக்ஜாம்’ புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தலா ரூபாய் 6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். சென்னையில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 6,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் 17- ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று வேளச்சேரியில் நடக்கும் நிகழ்ச்சியில் ரூபாய் 6,000 நிவாரணத் தொகையை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

“வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்”- உயர்நீதிமன்றம் அனுமதி!

இதையடுத்து, அன்றைய தினமே, குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணி முழு வீச்சில் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ