Homeசெய்திகள்தமிழ்நாடுமு.க.ஸ்டாலின், உதயநிதியின் டிவிட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கம்

மு.க.ஸ்டாலின், உதயநிதியின் டிவிட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கம்

-

மு.க.ஸ்டாலின், உதயநிதியின் டிவிட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கம்

ட்விட்டர் சந்தா செலுத்தாத பிரபலங்களின் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

twitter

பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன்பின் ட்விட்டர் சிஇஓ உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தது, ஆட்குறைப்பு, 12 மணி நேரம் வேலை, வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை ரத்து என ஊழியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கொடுத்தார். இதேபோல் பயனர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக, இனி ப்ளூ டிக்குகளுக்கு இலவசம் இல்லை என்று அறிவித்தார். ப்ளூ டிக் வைத்திருக்கும் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் கட்டணமாக செலுத்த வேண்டும், இல்லையேல் ப்ளூ டிக் பறிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் ட்விட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கப்பட்டது.

MUST READ