Homeசெய்திகள்தமிழ்நாடு"நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா?"- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

“நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா?”- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

-

 

"நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா?"- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!
Video Crop Image

காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு மூடப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

“சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்”- அண்ணாமலை பேட்டி!

இது தொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் தற்போது 704 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் 3.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சுமார் 65,122 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

நெல் வரத்துக் குறைவாக இருந்த போதிலும், விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப புதிய கொள்முதல் நிலையங்களைத் திறக்க ஆட்சியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் புகார் உண்மைக்கு புறம்பானது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ