Homeசெய்திகள்தமிழ்நாடுசிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்..!

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்..!

-

- Advertisement -

தென் மாநிலம் முழுவதும் எல் பி ஜி கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுபாடுகளை தளர்த்த வேண்டும் என்பது கோரிக்கை. சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்..!

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இச்சங்கத்தில் 5,514 லாரிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.ஓ.சி ,பி.பி.சி ,எச் பி.சி ஆகிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுக்களை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

லாரி உரிமையாளர்களுக்கும் எண்ணெய் நிறுவனுங்களுக்குமான ஒப்பந்தம் கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ந் தேதி நிறைவடைந்தது. சங்க நிர்வாகிகள்  வலியுறுத்தியதன் அடிப்படையில், கூடுதலாக 2 ஆண்டுகள் ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் வரும் ஆகஸ்ட் 31 ந் தேதி நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய ஒப்பந்தத்துக்கு மார்ச் 1 முதல் ஏப். 15 வரை விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஒப்பந்தக்கால கட்டத்தில் 5,514 எல் பிஜி டேங்கர் லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு அவை இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அறிவிப்பில் ஒப்பந்தக் காலத்தில் 3,478 லாரிகள் மட்டுமே ஒப்பந்தம் கோரி விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2036 லாரிகளுக்கு வேலை இழப்பு ஏற்படுவதுடன், லாரிகளை இயக்காமல் ஓரம்கட்டி நிறுத்தும் சூழல் எழுந்துள்ளது.

தற்போது அறிவித்துள்ள ஒப்பந்தத்தில் 21 டன் எடை ஏற்றும் மூன்றுசக்கரங்கள் (Triple Axle) லாரிகளுக்கு முன்னுரிமை என்று ஒப்பந்தவிதி உள்ளதாகவும், அவ்வாறான லாரிகளை கொண்டு வந்தால் மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்படும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஆனால், சங்கத்தில் உள்ள 5,700 லாரிகளில் சுமார் 80 சதவீத லாரிகள் 18 டன் எடை ஏற்றும் (Double Axle) லாரி மட்டுமே இருந்து வருகின்றன. இதனால் புதிதாக யாரேனும் மூன்றுசக்கர லாரிகளை வாங்கி ஒப்பந்தம் கோரும்போது அவர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே லாரி வைத்து தொழில் செய்வோருக்கு ஒப்பந்தம் கிடைக்காமல் போய்விடலாம் என்ற கவலை டேங்கர் லாரி உரிமையாளர்களிடையே எழுந்துள்ளது.

அதே போல, ஜீரோ முதல் 200 கி.மீ. வரையில் இயக்கப்படும் லாரிகளுக்கு ஏற்றி, இறக்க ஒரே வாடகை வழங்கியதாகவும், தற்போது புதிய ஒப்பந்தத்தில் ஜீரோ முதல் 50 கி.மீ. எனவும், 50 கி.மீ. முதல் தூரத்துக்கு தகுந்தாற்போல் வாடகை நிர்ணம் செய்துள்ளதாகவும், இதனால் வாடகை குறையும். ஒப்பந்தத்தில் உள்ள புதிய விதிகளின்படி டேங்கர் லாரி களை இயக்கினால் லாரி உரிமையாளர்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய ஒப்பந்தத்தில் விதிகளை திருத்தி, இரு சக்கர (Double Axle) லாரிகளை சதவித அடிப்படையிலான ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வாடகை நிர்ணயம் செய்வதில் பழைய முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கை. கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (27-3-2025) காலை 6 மணி முதல் தென் மாநிலம் முழுவதும் எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல் பி ஜி கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளை எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் உடனடியாக அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்பது லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநில அந்துஸ்து கிடைத்தால் மட்டுமே அரசு முழுமை பெறும் – சிவா வலியுறுத்தல்

MUST READ