தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
அந்த கடிதத்தில், “குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும், அரசுக்கும் எதிராக அமைத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின், அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக செயல்படுகிறார். ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் மூலம் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார்.
ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர் ஆர்.என்.ரவி. சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்கிறார் ஆளுநர். தமிழக அரசின் கொள்கைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முரணாக செயல்பட்டு பணிகளுக்கு முட்டுக்கட்டைப் போடுகிறார். ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் நீடிப்பது விருப்பத்தக்கதா? பொருத்தமானதா? என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
மாநில அரசைக் கவிழ்க்கும் வாய்ப்பைத் தேடும் ஆளுநரை வெறும் ஒன்றிய முகவராகவே கருத முடியும். வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் ஆளுநர். தனது நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியை சிறுமைப்படுத்தியுள்ளார். ஆளுநர் அரசியலமைப்பை மீறி செயல்பட்டு வருகிறார். அரசியல் வாதியாக மாறும் ஆளுநர் அந்த பதவியில் தொடரவே கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.