ஆசிரியருக்கு சேவை செய்து கல்வி கற்றேன் – ஆளுநர் ரவி
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் அரங்கில் ஆளுநரின் “எண்ணித்துணிக” பகுதி- 9 வது நிகழ்வு நடைபெற்றது. அதில் தேசிய, மாநில அளவில் விருது பெற்ற ஆசிரியர்கள் 24 பேருக்கு நினைவு பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன். குறிப்பாக பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.மின்சாரம் இல்லாமல் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாத பகுதியில் பல கிலோமீட்டர் நடந்து சென்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் நிறைய உள்ளனர்.
நான் சிறுவயதில் மாணவனாக இருக்கும் போது எனது ஆசிரியர் குளிப்பதற்கு கிணற்றில் தண்ணீர் இறைத்து கொடுப்பேன். ஆசிரியர் மாணவர் என்பது ஒரு உறவு. ஆசிரியர் உறங்கும் போது அவரது கால்களை பிடித்துவிடுவேன். அவர்கள் ஆசிரியர்கள் அல்ல, அதற்கும் மேலானவர்கள். அவர்கள் குரு என்று அழைத்தோம். அதுதான் நமது பண்பாடு ஆண்டாண்டு காலமாக அதைத்தான் நாம் பின்பற்றி வந்தோம்.குருவிற்கும் மாணவருக்கும் இடையேயான உறவு மட்டுமே இருந்தது. மாணவரின் பெற்றோர்கள் ,பாதுகாவலர்கள் என யாரும் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க முடியாது.
வளர்ந்து வரும் இந்த காலத்தில் ஆசிரியர்களின் நிலை கடினமாக உள்ளது.மாணவர்களின் பெற்றோர்கள்,பாதுகாவலர்கள் என ஆசிரியர்களுக்கு நெருக்கடியை கொடுக்கின்றனர்.ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே ஆன உறவும் கிடையாது. இன்று இந்தியா G20 மாநாட்டின் தலமை ஏற்று நடத்துகிறது.2047ம் ஆண்டு உலகில் தலைசிறந்த நாடாகவும், உலகிற்கு வழி காட்டும் நாடாகவும் இந்தியா மாறும். உலக அளவில் நாம் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் 3 நாடாக உள்ளோம்.நம் நாட்டில் புத்தொழில் வளர்ச்சி அதிகமாகி உள்ளது.நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தேசிய சொத்துக்கள்.
ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியைகள் அதிகம் உள்ளனர்.பெண்களுக்கான வளர்ச்சி என்பது நமது சமூகத்தில் உள்ளது.”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டி பேசினார்.