சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் பயணித்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்!
பார்க்கிங் பட வெற்றி விழா…. இயக்குனருக்கு பரிசளித்த ஹரிஷ் கல்யாண்…. என்னவென்று தெரியுமா?
நேற்று (டிச.15) மாலை 05.00 மணியளவில் சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு எடப்பாடிக்கு சென்றுக் கொண்டிருந்தபோது, பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியது.
அதைத் தொடர்ந்து, திடீரென பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும் அச்சு முறிந்து, கழன்று தனியாக ஓடியது. பின்பக்க டயர்கள் இல்லாமல் பேருந்து சிறிது தூரம் ஓடிய நிலையில், பின்னர் அதனை ஓட்டுனர் சாமார்த்தியமாக நிறுத்தினார். பேருந்தின் பின்பகுதி சாலையில் உரசியபடி சென்றதால் பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன்- பிரபு மகள் திருமணம்…. திரண்டு வந்து வாழ்த்திய திரைப்பட பிரபலங்கள்!
பின்னர் பேருந்து நிறுத்தப்பட்டவுடன், அதிலிருந்த பயணிகள், அவசர அவசரமாக கீழே இறங்கினர். தகவல் அறிந்து வந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், பயணிகளை மீட்டு வேறு பேருந்தில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.