
செங்கம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அந்தனூர் புறவழிச்சாலையில் பெங்களூரு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த கார் மீது எதிரில் வந்த லாரி வேகமாக மோதிய விபத்தில் காரில் இருந்த 2 சிறுவர்கள், 4 ஆண்கள், ஒரு பெண் என 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், உருக்குலைந்த காரில் இருந்து உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்த மாவட்ட காவல் உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட இரண்டாவது நாளே ரத்து!
அதேபோல், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.