கோவையில் பட்ட பகலில் செல் ஃபோன் கடையில், பெண் விற்பனையாளரிடம் விலை உயர்ந்த புளூட்டூத் ஹெட் செட் கொள்ளையடித்துக்கொண்டு ஓட்டம். கடையில் தனியாக இருந்த பெண் விற்பனையாளரிடம், பொதுமக்கள் நடமாட்டமுடைய நகரின் மையப்பகுதியில் பட்ட பகலில் அரங்கேறிய கொள்ளையால் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்த வியாபாரிகள் வலியுறுத்தல்.
கோவை சாய்பாபா காலனி, சாலையில் ரகுமான் என்பவர் டாக் அண்ட் வாக் (Talk and Walk) என்ற மொபைல் கடையை நடத்தி வருகின்றார். இக்கடையில் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இதில் மதிய உணவு இடைவெளிக்காக சிலர் வெளியில் சென்று இருக்கின்றனர். அப்போது கவிதா என்ற பெண் மட்டும் தனியாக கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கின்றார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், விலை உயர்ந்த ஹெட்செட் ஒன்றை கேட்டு, அதனை வாங்கி விவரங்களை கேட்டு வந்துள்ளார். விலை உயர்ந்த ப்ளூடூத் ஹெட்செட்டை கையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது உண்ணும் பின்னும் திரும்பி திரும்பி பார்த்து வந்த அந்த வாலிபர், திடீரென விலை உயர்ந்த ப்ளூடூத் ஹெட் செட்டை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். பின்பு சிசிடிவியை பாா்வையிட்டபோது.
அப்போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்தது தெரிய வந்தது. இருவர் வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு ஆப் செய்யாமல் ரன்னிங் இல் வைத்திருக்கின்றனர். வாடிக்கையாளர் போல் வந்த ஒரு வாலிபர் , விலை உயர்ந்த ப்ளூடூத் ஹெட் செட்டை தூக்கிக்கொண்டு ஓடி வாகனத்தில் ஏறி தப்பி ஓடி விட்டார் என்பது தெரிய வந்தன. பட்டப் பகலில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் வாகனங்கள் அடிக்கடி சென்று கொண்டிருக்கும் இடத்தில் இதுபோன்று, இதற்கு முன்பும் இது பொல் திருட்டு நடந்ததை தெரிவித்த வியாபாரிகள், பெண்பணியாட்க்கள் பலரும் பல கடைகளில் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.
பட்ட பகலில் பொதுமக்கள் வாகன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், இது போன்று திருட்டு அரங்கேரி இருப்பது, அடுத்து எந்தவிதமான அசம்பாவித நிலைக்கு வழிவகுக்கும் என்பதனால், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதோடு மட்டுமின்றி, இதுபோன்று நிகழ்வுகள் நடக்காத வகையில், உரிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினர்.