குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் மார்ச் 01 முதல் மாணவர் சேர்க்கை!
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், குலசேகரப்பட்டினத்தில் உள்ள தற்காலிக ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ரோகிணி RH- 200 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட ரோகிணி ராக்கெட்டில் காற்றின் திசை வேகத்தை அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
“எனது பெயரைக் கூற பிரதமருக்கு மனமில்லை”- கனிமொழி எம்.பி. பேட்டி!
ரோகிணி ராக்கெட் 100 கி.மீ. தூரம் வரை சென்றுவிட்டு இந்திய பெருங்கடல் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ரோகிணி ராக்கெட் வளிமண்டலத்தை ஆய்வுச் செய்யும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.