Homeசெய்திகள்தமிழ்நாடு"ரூபாய் 1 கொடுத்தால் 29 பைசா மட்டுமே தருகிறார்கள்"- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

“ரூபாய் 1 கொடுத்தால் 29 பைசா மட்டுமே தருகிறார்கள்”- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

-

- Advertisement -

 

"ரூபாய் 1 கொடுத்தால் 29 பைசா மட்டுமே தருகிறார்கள்"- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!
Video Crop Image

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழக அரசு ரூபாய் 1 கொடுத்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. தமிழகத்தில் இருந்து நேரடி வரி வருவாயாக ரூபாய் 6.23 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்றிருக்கிறது.

“பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

2011- 2023 வரை மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு ரூபாய் 4.75 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு நிதி முறையாகக் கிடைப்பதில்லை. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்திற்கு மிக குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியை தமிழக அரசு சிறப்பாக கையாள்கிறது.

தமிழகத்தில் மெட்ரோ திட்டத்திற்காக மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை. கர்நாடகா, உத்தரப்பிரேதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் மெட்ரோ திட்டத்திற்காக குறைவான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அண்மையில் பேரிடர்களைச் சந்தித்துள்ளன.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ரூபாய் 6,000 நிவாரணம் வழங்கியுள்ளது. தமிழகம் இரண்டு பேரிடர்களை அடுத்தடுத்து சந்தித்தும் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி உதவாதது வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ