Homeசெய்திகள்தமிழ்நாடுசெஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை

-

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி ஆடவர், மகளிர் என 2 பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்தது. இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடிய தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், செஸ் அணியின் தலைவரும், பயிற்சியாளருமான ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சத்துக்கான காசோலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது, அடுத்து வரும் குளோபல் செஸ் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழ்நாட்டு வீரர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய  உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

MUST READ