ஆளுநருக்கு இதயத்திற்கு பதிலாக களிமண் இருக்கிறதா? – ஆர்.எஸ்.பாரதி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், 70 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்ட விழா நடைபெற்றது.
பொதுக்கூட்ட விழாவில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “இந்திய அரசியலில் பெரிய மாற்றத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழாவில் பல்வேறு தலைவர்கள் பாரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், மல்லிகார்ஜுனா கார்கே போன்றோர் உரையாற்றுகிற போது நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருப்பார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி 37 சதவீதமாக தான் பெற்றார். ஆனால் 63 சதவீத வாக்குகள் எதிர்க்கட்சிகள் பெற்றன. 37 சதவீதம் பெற்ற மோடி பிரதமர் ஆகிவிட்டார். இது 2024-இல் வராது. ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை செய்ய முடியாது. இதனால் 44 பேர் பலியாகி உள்ளனர்.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டத்தை கொண்டு வந்து ஆன்லைன் தடை சட்டத்தை நிறைவேற்ற கோரி ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் நான்கு மாதம் கழித்து உங்களுக்கு அதிகாரம் இல்லை என கூறுகிறார். ஒன்றாம் தேதியில் இருந்து ஆளுநர் தூங்கிக்கொண்டிருந்தார் போல… ஆனால் இதையெல்லாம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்க மாட்டார். எமர்ஜென்சியை பார்த்தது தான் திமுக கவர்னர் சீண்டி பார்க்கிறார். கவர்னருக்கு வாய் இருக்கிறது, அதனால் காதில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் இதற்காக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புத்திசாலித்தனமாக பேசுகிறார். கவர்னருக்கு வாய் முக்கியம் அல்ல, காது முக்கியம் அல்ல, இதயம் தான் முக்கியம் என கூறுகிறார். நான் கேட்கிறேன் ஆன்லைன் ரம்மியால் 44 பேர் இறந்திருக்கிறார்கள். இந்த இதயம் இதை அனுமதிக்கிறதா இல்லையா? இதயத்திற்கு பதில் களிமண்ணு தான் அங்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.