Homeசெய்திகள்தமிழ்நாடுஇப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது - ஆர்.எஸ்.பாரதி பேட்டி

இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது – ஆர்.எஸ்.பாரதி பேட்டி

-

இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களில் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நீட் தேர்வை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது,“நான் படித்தபோது பி.ஏ. படித்தாலே போர்டு வைத்து கொள்வார்கள். இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது. ஊரில் அத்தனை பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது.

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு உள்ளது. எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்குதான் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு தீர்மானத்தை ஒட்டு மொத்த தமிழர்களும் ஆதரிக்கிறார்கள்”எங்கள் பட்டப்படிப்புகள் குலம், கோத்திர பெருமையால் வரவில்லை. எங்கள் பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை. தமிழ்நாட்டில் அனைவரும் படிக்க திராவிட இயக்கங்களே காரணம், சாதிவாரி இட ஒதுக்கீட்டால்தான் எங்களில் பலர் மருத்துவர் ஆகினர். என்றார்.

ஆர்.எஸ். பாரதியின் இந்த பேச்சானது கடும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில், “பி.ஏ. பட்டம் குறித்து பேசியதில் உள்நோக்கம் இல்லை. கல்வி அனைவருக்குமானதாகிவிட்டடது என்ற அர்த்தத்தில் மட்டுமே அதை கூறினேன்” என விளக்கம் அளித்துள்ளார்.

 

 

MUST READ