தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஜூன் 28ஆம் தேதி இரண்டாம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவின் முதற்கட்ட நிகழ்வு சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதி வாரியாக 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பரிசுத்தொகை அளித்து கௌரவித்தார்.
அதனைத் தொடர்ந்து கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்ட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 740க்கும் மேற்பட்டோர் தங்களது பெற்றோருடன் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பேசிய விஜய், நீட் தேர்வு என்பது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரானது. மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் தேர்வு வைப்பதற்கும் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் “கல்வி விருது வழங்கும் விழாவில்” அக்கட்சியின் தலைவர் விஜய் நீட் தேர்வை எதிர்த்து பேசியுள்ளார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் நீட் விளக்கு கோரி தீர்மானம் இயற்றிய தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் விஜய் கூறியிருந்தார்”.
நடிகர் விஜய்யும் இந்த போராட்டத்திற்கு, எங்களுடைய முயற்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் என்ற முறையில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஆர்.எஸ் பாரதி நன்றி தெரிவித்துள்ளார்.