Homeசெய்திகள்தமிழ்நாடுபிரபலமான குளிர்பான பாட்டிலுக்குள் ரப்பர் பொருள்!

பிரபலமான குளிர்பான பாட்டிலுக்குள் ரப்பர் பொருள்!

-

 

பிரபலமான குளிர்பான பாட்டிலுக்குள் ரப்பர் பொருள்!

மதுரை மாவட்டத்தில் விற்பனைச் செய்யப்படும் பிரபலமான குளிர்பான பாட்டிலுக்குள் ரப்பர் பொருள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குளிர்பானங்களின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது குழந்தைக்கு கொடுக்க பிரபலமான குளிர்பானம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதில், ரப்பர் வாசர் இருந்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்தது!

உடனடியாக குளிர்பான விநியோக மேலாளரைத் தொடர்புக் கொண்டு கேட்டதற்கு அவர் முறையாக பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து, இந்த விவகாரத்தை உணவுத்துறை அதிகாரியின் கவனத்திற்கு குழந்தையின் தந்தை எடுத்துச் சென்றுள்ளார். குழந்தையின் உயிரைப் பறிக்கும் விதமாக குளிர்பானத்தை முறையாகப் பரிசோதிக்காமல் விற்பனைக்கு கொண்டு வந்த நிறுவனம் மீது வழக்கு தொடரப் போவதாக தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

MUST READ