சபரிமலை செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
“பென்னிகுவிக் கல்லறையை சீரமைக்க நிதி திரட்டப் போகிறேன்”- செல்லூர் ராஜு அதிரடி!
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சபரிமலை பக்தர்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல்- எர்ணாகுளம் இடையே இன்று (நவ.20) சிறப்பு ரயில் இயக்கப்படும்.
14 மாதங்களுக்கு பிறகு ஒப்புதல் வழங்கிய ஆளுநர்!
இன்றிரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில், நாளை (நவ.21) பகல் 11.55 மணிக்கு எர்ணாகுளத்தைச் சென்றடையும்; இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை ,சேலம், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.