Homeசெய்திகள்தமிழ்நாடு'உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம்'- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

‘உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம்’- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

-

 

'உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம்'- தமிழக அரசு அரசாணை வெளியீடு!
File Photo

உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

சேப்பாக்கத்தில் சென்னை – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 50,000- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பளங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

'உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம்'- தமிழக அரசு அரசாணை வெளியீடு!
TN Govt

அதையேற்று, உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனை தூத்துக்குடியில் உள்ள உப்பள தொழிலாளர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

ஈச்சர் வேனில் வைத்திருந்த 19 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் விசாரணை

அரசாணையில், 9,809 உறுப்பினர்களுடன் உப்பள தொழிலாளர் நலவாரியம் செயல்படும். பிற முறைசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கான சலுகைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி உள்ளிட்ட சலுகைகள் உப்பள தொழிலாளர் நலவாரியத்தின் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ