சனாதன பேச்சுத் தொடர்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனுத்தாரருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன் வைத்தனர்.
அனைத்து வடிவப் போட்டிகளிலும் இந்திய அணி முதலிடம்!
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும்; அந்த மாநாட்டின் பின்னணியைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக ஏன் உயர்நீதிமன்றத்தை நாடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், எங்களை காவல் நிலையமாக மாற்றுகிறீர்களா?, உங்கள் கோரிக்கை தான் என்ன? சம்பந்தப்பட்ட நபர்கள் பேசியது என்ன? எனவும் வினவினர்.
8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன்!
சனாதனத்துக்கு எதிராக பேசியது சமூகத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியதாகவும், இது உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, எம்.பி.க்கள் ஆ.ராசா, திருமாவளவன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.