Homeசெய்திகள்தமிழ்நாடு"சங்கரய்யாவின் டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் தேவை"- அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!

“சங்கரய்யாவின் டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் தேவை”- அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!

-

 

"பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ஏன்?"- அமைச்சர் பொன்முடி விளக்கம்!
Photo: Minister Ponmudy

சுதந்திரப் போராட்ட வீரர்கள் விவகாரத்தில் ஆளுநரின் விமர்சனத்திற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பதிலடி கொடுத்துள்ளார்.

தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!

அப்போது அவர் கூறியதாவது, “சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது ஆளுநருக்கு உண்மையிலேயே அக்கறை இல்லை. சுதந்திர போராட்ட வீரர்கள் மீது ஆளுநருக்கு அக்கறை இருந்தால் கோப்புக்கு ஒப்புதல் தர வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைவு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மூலம் சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அதற்கான கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்த நிலையில், அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வலியறுத்தி வருகின்றனர்.

MUST READ