Homeசெய்திகள்தமிழ்நாடுஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 20 தங்கப்பதக்கங்கள்- சசிகலா பாராட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 20 தங்கப்பதக்கங்கள்- சசிகலா பாராட்டு

-

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 20 தங்கப்பதக்கங்கள்- சசிகலா பாராட்டு

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி ஏற்கனவே 13 தங்கம் உள்பட 56 பதக்கங்களை வென்று இருந்த நிலையில் தற்போது 20 தங்கப்பதக்கங்கள் உட்பட 83 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவு - சசிகலா இரங்கல்..

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி அதிகபட்சமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஜகார்ட்டாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 70 பதக்கங்களை வென்று இருந்த நிலையில், தற்போது 83 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. மேலும், தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியிலேயே இந்திய அணி 100 பதக்கங்களுக்கு மேல் வென்று உலக அரங்கில் நம் இந்திய வீராங்கனைகளும், வீரர்களும் சாதனை படைக்க வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஏற்கனவே 13 தங்கப்பதக்கங்கள் வென்ற நிலையில், அதனைத்தொடர்ந்து மகளிருக்கான 5000மீ ஓட்டப்பந்தயத்தில் பருல் சௌத்ரிஅவர்களுக்கும், மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி அவர்களுக்கும், வில் வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா மற்றும் ஓஜாஸ் பிரவீன் ஆகியோருக்கும், ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அவர்களும், ஆடவர் 4×400மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ் ரமேஷ் அடங்கிய இந்திய அணியும், மகளிர் வில் வித்தையில் ஜோதி சுரேகா, அதிதி மற்றும் பர்னீத் கவுர் அடங்கிய இந்திய அணியும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தீபிகா பள்ளிகல் மற்றும் ஹரிந்தர்பால் சிங் ஆகிய இருவரும் அடங்கிய இந்திய அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

sasikala

அதேபோன்று மகளிர் 4×400 மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளதற்கும், கலப்பு 4×400மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேசன் மற்றும் ராஜேஷ் ரமேஷ் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளதற்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மகளிர் 400 மீ தடை தாண்டுதல் ஓட்டப்பந்தய தனிநபர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதற்கும், ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் அவர்கள் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் உள்ளிட்ட 83 பதக்கங்களை வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ