Homeசெய்திகள்தமிழ்நாடுகுவைத் தீ விபத்தில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது...

குவைத் தீ விபத்தில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது – சசிகலா!

-

- Advertisement -

ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவு - சசிகலா இரங்கல்..

குவைத் தீ விபத்தில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 2குவைத்தில் மங்காஃப் பகுதியில் 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு வர தேவையான அனைத்து ஏற்பாடுகளை விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ