
சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது.
மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள துணிச்சரமேடு கிராமத்தில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு பரங்கிப்பேட்டையில் இருந்து நாள்தோறும் 25- க்கும் மேற்பட்ட மாணவர்களை வழக்கமாக ஏற்றிச் செல்ல பள்ளி வேன் செல்வது வழக்கம்.
வழக்கம் போல் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 14 மாணவர்களை ஏற்றிக் கொண்டு, பள்ளி வேன் ஒன்று தீர்த்தம்பாளையம் பகுதியில் வந்த போது, வேனில் இருந்து கரும்புகை வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்த ஓட்டுநர் முருகன், உடனடியாக பள்ளி மாணவர்களை வேனில் இருந்து கீழே இறக்கிவிட்டு, சாதூர்யமாக செயல்பட்டுள்ளார்.
“அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி”- அமைச்சர் ரகுபதி பேட்டி!
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கொளுந்துவிட்டு எரிந்த பள்ளி வேனை தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைத்தனர். ஓட்டுநரின் துரித செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.