சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (நவ.16) காலை 09.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “12- ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1- ல் தொடங்கி, மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறும்; 10- ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26- ல் தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும். 11- ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4- ல் தொடங்கி, மார்ச் 25- ம் தேதி வரை நடைபெறும்.
ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!
12- ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி முதல் பிப்ரவரி 17- ஆம் தேதி வரை நடைபெறும். 11- ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி தொடங்கியும், 10- ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 23- ஆம் தேதியும் தொடங்குகிறது.
வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!
10- ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10- ஆம் தேதியும், 12- ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6- ஆம் தேதியும், 11- ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16- ஆம் தேதியும் வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.