
தியாகராய நகரில் உள்ள பிரபல அசைவ உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!
சென்னை தியாகராய நகரில் பிரபல செட்டிநாடு அசைவ உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு ஐடி துறையில் பணிபுரியும் பெண் ஒருவர் உள்பட 15- க்கும் மேற்பட்டோர் மத்திய உணவிற்கு வருகைத் தந்தனர். சாப்பிட்ட பிறகு, அவர்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மண்டல உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். உணவு மற்றும் உணவுத் தயாரிக்கும் கூடத்தை ஆய்வு செய்த அவர்கள், இறைச்சி கெட்டுப்போய் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
“மகளிர் உரிமைத்தொகைத் திட்ட நிதி”- தமிழக அரசு விளக்கம்!
இதனையடுத்து, உரிய விளக்கம் அளிக்குமாறு உணவகத்திற்கு நோட்டீஸ் அளித்த அதிகாரிகள், உணவகத்திற்கு சீல் வைத்தனர்.