Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி போராட்டம் அறிவித்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் தர்கா ஆகியவை அமைந்துள்ளன. இந்த தர்காவில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி போன்ற உயர் பலிகளை கொடுக்கக்கூடாது என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு சார்பில் நாளை திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து விட்டது.

இந்தநிலையில், இந்து முன்னணி போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் பிரவேசிக்காத வகையில் இன்று காலை 6 பணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை பாதுக்காக்கும் பொருட்டு, மனித வாழ்வு, பொது பாதுகாப்பு மற்றும் பொதுஅமைதியை கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

MUST READ