Homeசெய்திகள்சீமான் அப்டேட் இல்லாத அரசியல்வாதி - மா.சுப்பிரமணியன் பதில்

சீமான் அப்டேட் இல்லாத அரசியல்வாதி – மா.சுப்பிரமணியன் பதில்

-

- Advertisement -

சுகாதாரத் துறை குறித்தும் டெங்கு பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சொல்கின்ற நாளில் சொல்கின்ற இடத்தில் விவாதம் நடத்த தயார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சீமான் அப்டேட் இல்லாத அரசியல்வாதி - மா.சுப்பிரமணியன் பதில்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது என்பதற்கு  மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

”நம்மைக் காக்கும் 48” என்கின்ற திட்டத்தின் கீழ் பயனடைந்த 3 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 6,744 நிரந்தர பணியிடங்கள் நிரப்ப பட்டுள்ளன என்றார். இதுவரை 18460 நிரந்தரம் மற்றும் தற்காலிக பணியிடங்கள் அரசு பதவியேற்ற பின் நிரப்பப்பட்டுள்ளன.

மேலும் 2553 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப 23,917 விண்ணப்பங்கள் பெற பட்டுள்ளன. இவர்களின் தகவல்கள் சரி பார்க்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பித்த அனைவருக்கும் ஜனவரி 27-ஆம் தேதி ஒரே கட்டமாக ஆன்லைன் தேர்வு நடைபெறும். தேர்வு நடத்திய பிறகு அதில் இருந்து முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி, காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை ஒட்டி சுகாதார ஆய்வாளர்களை நியமிக்க தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் இல்லை, மருத்துவர்கள் இல்லை என்னும் எடப்பாடியின் கருத்து ஏற்புடையதல்ல.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 1002 மருத்துவர்கள் உட்பட செவிலியர்கள் தொடங்கி பாதுகாவலர்கள் வரை 4870 பேர் பணியில் உள்ளனர்.

யாரும் யாரையும் பதட்டப்படுத்த வேண்டாம். குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் அவரது முன்னாள் அமைச்சர்கள் இதுவரை எந்த மருத்துவமனைக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்யவில்லை.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட விருதுகளை சுகாதாரத் துறை பெற்று இருக்கிறது. ஐ.நா.சபையே விருது தந்த இந்த துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி அறிக்கை விட்டிருக்கிறார். டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு இருந்து கொண்டிருக்கிறது. இது கூட தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

டெங்கு கட்டுபாட்டில் அரசின் நடவடிக்கைகள் குறித்த எதிர்க்கட்சித் தலைவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் .நேரத்தையும் இடத்தையும் நீங்களே குறித்து சொள்ளுங்கள் என சவால் விடுக்கிறேன்.உங்களுடன் எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாம். நான் தயாராக இருக்கிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத தலைவராய் இருப்பது வருத்தமளிக்கிறது. மருத்துவ பணியிட நிரப்பப்படவில்லை என ஒரு போலியான அறிக்கை வெளியிடுகிறார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற முதல்வர்கள் அடுத்து தகுதி பெற்றவர்கள் இன்சார்ஜ் என பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 26 பேரில் அந்த 14 பேருக்கு  பணி நியமன ஆணை வழங்கப்பட்டு  அக்டோபர் 3ஆம் தேதி பணியில் சேர்ந்து விட்டார்கள். 36 மருத்துவக் கல்லூரியில் தகுதி பெற்ற நிரந்தரமான முதல்வர்கள் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிறது.

இந்த சம்பவம் கூட தெரியாமல் ஒரு மாதத்திற்கு பிற்பாடு ஒரு அரசியல் காட்சி சேர்ந்தவர் சொல்வது உண்மையாகவே வருத்தமாக இருக்கிறது. 14 பேர் இன்னும் நிரப்பப்படவில்லை என்ன சொல்கிறார்கள்.

இவர்களெல்லாம் அப்டேட் அரசியல்வாதி என நினைத்துக் கொண்டிருந்தவர்கள்,  ஆனால் காலாவதி அரசியல்வாதியாக மாறி உள்ளனர் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் 15,000 பேருக்கு வேலை- 15 தேதி டீன் ஷூஸ் கம்பெனிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

MUST READ