Homeசெய்திகள்தமிழ்நாடு2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டி - சீமான் திட்டவட்டம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டி – சீமான் திட்டவட்டம்!

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்று  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது:- வக்பு வாரிய சட்டத்தில் ஏற்கனவே இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது என்பது
ஆபத்தான போக்கு ஆகும். இந்து மக்கள் மனதை மகிழ்விக்க இதுபோல் கொண்டு வந்துள்ளனர். இஸ்லாமியர்கள் வாக்கு வேண்டாம் என்பதற்காகவும் இதுபோல் செய்துள்ளனர். இது பேராபத்தை உண்டு பண்ணும். சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய இஸ்லாமியர்கள் தற்போது பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் உள்ளனர். ஆனால் போராடாதவர்கள் நாடாளுமன்றத்திலும் உயர் பதவிகளிலும் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் 38 லட்சம் ஏக்கர் உள்ளது என்கிறார்கள். அதில் ஏதும் முறைகேடு நடக்கவில்லையா? அதைப் பற்றி விசாரிப்பதற்கு இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை கொண்ட குழுவை அமைப்பீர்களா?. இதைப் பற்றி என்னிடம் விவாதிக்க வாருங்கள் நானும் தயாராக இருக்கிறேன். அரபு நாடுகளில் பெரிய பெரிய அளவில் இந்து கோவில்களை கட்டி உள்ளனர். நமது பிரதமர் அங்கு சென்று கோவிலை திறந்துவைத்து உரையாற்றி உள்ளார். பாகுபாடு பார்த்துக் கொண்டிருப்பது தேசப்பற்றுக்கு எதிரானது. உலக அளவில் அன்னிய செலவாணி அதிக ஏற்றுமதி உள்ளது மாட்டுக்கறியில் தான். இந்த சட்டத்தில் நிறைய குறைகள் உள்ளது. கடந்த கால நிகழ்வுகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தில் 2 இஸ்லாமியர்களை சேருங்கள் பார்போம். தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் இஸ்லாமியர்கள் சேர்க்க வேண்டும். அங்குதான் பெரிய கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக சான்றுகளை நானே தருகிறேன். கரூரில் இலட்சக்கணக்கான மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கோயில் நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பது என கூறிய இந்த ஆட்சியாளர்கள் தான், இன்று கோவில் நிலத்தை ஆக்கிரமித்துவிட்டீர்கள் என இடிப்பதும் இவர்கள் தான். அறிவு உள்ளவர்கள் ஆட்சியில் நடக்கும் செயலா இது?.

வக்பு சட்டத்தை இயற்றி விட்டீர்கள். மேலும் மாநில அரசுகள் நிர்வகிக்கலாம் என கூற வேண்டும். மாவட்ட ஆட்சியர் யார் கட்டுபாட்டில் இருப்பார்கள் உள்துறை சொல்வது தான் செய்வார்கள். இந்த சட்டத்தால் சொத்துக்கள் ஆக்கிரமித்து பெரிய பணக்காரகளுக்கு செல்லும் வாய்ப்புள்ளது. பஞ்சமி நிலத்தை மீட்க சட்டம் கொண்டு வந்து அந்த நிலத்தை மீட்டு தர வேண்டும். ரொம்ப நாள் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. எங்களுக்கு அதிகாரம் வரும்போது நீங்கள் எளிதாக கடந்து செல்ல முடியாது. கட்சிகளுக்கு மக்களின் வாக்குகள் தான் முக்கியம். அவர்கள் வந்தாலும் கட்சத்தீவை மீட்க போராடுவார்கள். இவர்கள் வந்தாலும் கச்சத்தீவை மீட்க போராடுவார்கள். கட்சிகள் மாறுதல் இருக்கிறது. கொள்கை மாறுதல் இருக்கிறதா? அதை மாற்றுவதற்கு தான் நாங்கள் வந்திருக்கிறோம். அண்ணாமலை மாற்றப்பட்டது குறித்து அந்த கட்சி தான் முடிவு எடுத்தது. அதில் கருத்து கூற முடியாது. நாற்பது முனை என்றாலும் நாங்கள் தான் கூர்முனை. இந்த நாட்டில் மக்களோடு தான் நிற்பேன். ஒரே ஒரு கட்சியோட தான் எனக்கு போட்டி. அது அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சி உடன். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அமைச்சர் பொன்முடி பேச்சு குறித்து நாம் முடிவு எடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ