Homeசெய்திகள்தமிழ்நாடுகிறிஸ்தவர்கள்,முஸ்லிம்களை சிறுபான்மை என சொன்னால் செருப்பால் அடிப்பேன்- சீமான்

கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்களை சிறுபான்மை என சொன்னால் செருப்பால் அடிப்பேன்- சீமான்

-

- Advertisement -

கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்களை சிறுபான்மை என சொன்னால் செருப்பால் அடிப்பேன்- சீமான்

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என்றால் செருப்பை கழட்டி அடிப்பேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் - என்.எல்.சி-க்கு துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்..

மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் பொழுது, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சாத்தானின் குழந்தைகள் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சர்ச்சையையே ஓயாத நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “மதத்தைவிட சாதியைவிட எல்லா அடையாளத்தையும் விட மொழி, இனம் தான் பெரிது. இங்கே இருக்கிற அனைத்து கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். சிறுபான்மையினர் அல்ல. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என்றால் செருப்பை கழட்டி அடிப்பேன். இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் அநீதிக்கு எதிராக பிறந்தவை.

அநீதிக்கு எதிரான புரட்சி தீயை பற்ற வைக்கவே நான் வந்தேன் என இயேசு கூறினார். எங்கே அந்த தீ? சாத்தானின் குழந்தைகள் என்று அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் கூறவில்லை. இலங்கையில் தமிழ் இனத்தை கொன்று குவித்த காங்கிரஸுக்கு துணை போகிறீர்களே என்ற ஆதங்கத்தில் தான் அப்படி கூறினேன். சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைப்பது சாதியை வளர்ப்பதற்காக அல்ல சமூக நீதியை நிலைநாட்டுவதற்கே! அரசு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநதிக்கு என்ன வேலை?” என்றார்.

MUST READ