“கொடுங்கோல் ஆட்சிக்கு இதுவே உதாரணம்” – சீமான்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை நடவடிக்கை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆட்சிக்கு யார் வந்தாலும் அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். கொடுங்கோல் ஆட்சிக்கு வந்தாலும் இதுவே உதாரணம். செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வேண்டும். மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க இதுபோல் பல வேலைகளை செய்வார்கள். தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் விரல்கள் போல் செயல்படுகின்றன. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சினிமா பாணி. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை நடவடிக்கை. இந்த அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி இல்லை, கொடுங்கோலாட்சி முறை.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது எதிர்பார்த்ததுதான். கைது என்றால் நெஞ்சுவலி வருவதை நிறைய படத்தில் பார்த்துள்ளோம். என்னை பிடிக்கவில்லை என்றால் நாளை என் வீட்டிலும் ரெடு வரலாம். அதிமுக ஆட்சி முடிந்து இவ்வளவு நாட்கள் கழித்து தற்போது நடவடிக்கை ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.