தமிழக இந்து, சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அரசியலுக்கு ஆயத்தமா? புதுச்சேரி முதல்வருடன் நடிகர் யோகிபாபு சந்திப்பு
இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து மேடையில் பேசும் போது, அதே மேடையில் தமிழக இந்து, சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அமைதியாக இருந்துள்ளார். இதனால் இந்து, சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தகுதியை சேகர்பாபு இழந்துவிட்டார்.
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு!
எனவே, அமைச்சர் சேகர்பாபு தனது அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில், வரும் செப்டம்பர் 10- ஆம் தேதிக்குள் மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.