Homeசெய்திகள்தமிழ்நாடு'அக்.16- ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை!'

‘அக்.16- ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை!’

-

 

'அக்.16- ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை!'
File Photo

சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு உதான் திட்டத்தின் கீழ் விமான சேவையைத் தொடங்க மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம், அலையன்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதியை வழங்கியிருந்தது. அத்துடன், உதான் 5.0 திட்டத்தில் காமலாபுரம் விமான நிலையத்தை இணைத்தது.

கனடா வாழ் தமிழர்களை மீட்பது தொடர்பாக தமிழக அரசு இன்று ஆலோசனை!

இந்த நிலையில், சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கும், பெங்களூருவில் இருந்து சேலத்துக்கும், சேலத்தில் இருந்து கொச்சினுக்கும், கொச்சினில் இருந்து சேலத்துக்கும் வரும் அக்டோபர் 16- ஆம் தேதி முதல் விமான சேவையைத் தொடங்க அலையன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், சேலத்தில் இருந்து சென்னை வழியாக ஹைதராபாத்திற்கும், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வழியாக சேலத்திற்கும் விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வரும் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டிலில் பால் விற்பனை- கைவிரித்த ஆவின்!

சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான சேவைத் தொடங்கவுள்ளதால், சேலத்தில் உற்பத்தியாகும் பொருட்களின் ஏற்றுமதியும், சரக்கு போக்குவரத்தும், வர்த்தகமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ