Homeசெய்திகள்தமிழ்நாடு40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக...

40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார் – செல்லூர் ராஜூ

-

40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார். மதுரையில் தொடர் கொலை நடைபெற்று வருவதால் நடைப்பயிற்சிக்கு செல்ல கூட மக்கள் அச்சப்படுகின்றனர். அரசியல் தலைவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் டாக்டர் சரவணனை வானளாவ புகழ்ந்து பேசி வாக்கு கேட்டோம். ஆனால், மக்கள் சட்டமன்றத்திற்கு ஒரு பார்வை, நாடாளுமன்றத்திற்கு ஒரு பார்வை என வாக்குகளை செலுத்தியுள்ளனர். யானைக்கும் அடி சறுக்கும். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தலைமையே தோல்வியை சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் களம் வேறு. இந்த முடிவுகள் இறுதி அல்ல. காலம் மாறும். அதிமுக மீண்டும் அரியணை ஏறும். எடப்பாடி பழனிச்சாமி எப்படி ஆட்சி செய்யப் போகிறார் என விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் 4.5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். 2026-இல் எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கியதனத்தை பார்க்கப்போகிறீர்கள்” என இவ்வாறு அவர் பேசினார்.

 

 

MUST READ