Homeசெய்திகள்தமிழ்நாடுஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள் தான் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஐ சார்ந்தவர்கள் - செல்வப்பெருந்தகை!

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள் தான் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஐ சார்ந்தவர்கள் – செல்வப்பெருந்தகை!

-

- Advertisement -

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள் தான் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஐ சார்ந்தவர்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு மத்தியில் பேசிய அவர், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி கடந்த 15ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரையானது கேரளா, புதுச்சேரி வழியாக தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இன்று மாலை சென்னை வந்தடைந்தது. அதனை சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேசியதாவது, தொடர்ந்து 33 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்திலிருந்து ஜோதியை எடுத்து வருகிறார்கள்.

கர்நாடகாவில் இருந்து 15 ஆம் தேதி புறப்பட்டு கேரளா, பாண்டிச்சேரி வழியாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சென்னை வந்தடைந்திருக்கிறார்கள். நாளை ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள மேனாள் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். நாளைய தினம் தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழியை ஏற்க இருக்கிறோம். மாநிலங்களுக்கு இடையே அணையை கட்டுவது மாநிலங்களில் உள்ள ஒருமைப்பாட்டை உறவை சீர்குலைக்கும். நீர் எங்கு சென்றடைகிறதோ அவர்களுக்குத்தான் சொந்தம் என்று நீர் ஆதாரத்தைக் கொடுத்து உலகமே எடுத்துரைக்கிறது.

கேரளா தங்களை முழுவதுமாக தேசப்பற்றுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை அவர்கள் தரவேண்டும். பிரதமர் மோடி பல செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டி இன்னும் சமூக வலைதளங்களில் இருக்கிறது. பாகிஸ்தானை பற்றி, இஸ்லாமியர்களைப் பற்றி, இரண்டு மாடுகளில் ஒரு மாடுகளை கொடுத்து விடுவார்கள், இரண்டு அறைகள் இருந்தால் ஒரு அறையை கொடுத்து விடுவார்கள், இட ஒதுக்கீட்டை பகிர்ந்து கொடுத்து விடுவார்கள் என வெறுப்பு அரசியலை பேசி இருக்கிறார்.

இப்படி எல்லாம் நாகரீகம் இல்லாமல் பேசிவிட்டு நான் பேசவில்லை என சொல்வது பிரதமருக்கு அழகில்லை. பிரதமர் மோடி என்ன பேசி இருக்கிறார் என்று நாடு மற்றும் நாட்டு மக்கள் அறிவார்கள். வெறுப்பு அரசியல், மத அரசியல், மொழி அரசியல், சாதி அரசியல் போன்ற சகதிகளில் பிரதமர் மோடி மூழ்கி இருக்கிறார். பாஜகவிற்கு எதிராக மக்கள் வாக்களித்து வருகிறார்கள். பிரதமர் மோடி அரசியல் அரங்கில் இருந்து அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுவது உறுதி. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள் தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ சார்ந்தவர்கள். கலவரத்தை ஏற்படுத்துவதற்கும் அமைதியை சீர்குலைப்பதற்கும் அடுத்த கட்ட பிரச்சாரத்தை பயன்படுத்துவார்கள்.‌ என தெரிவித்தார்.

 

 

MUST READ