Homeசெய்திகள்தமிழ்நாடுராகுல் காந்தி தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கிறோம்...

ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கிறோம் – செல்வப்பெருந்தகை!

-

- Advertisement -

ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைவரும் ஒட்டுமொத்தமாக காரிய கமிட்டி உறுப்பினர்கள், தலைவர்கள், சட்டமன்ற தலைவர்கள், அனைவரும் ஒருமனதாக ஒற்றுமையாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து இருக்கிறோம். ராகுல் காந்தி அவர்கள் பாராளுமன்றத்தின் தலைவராக வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக வர வேண்டும் என்று பல காரணங்களால் வாழ்த்து தெரிவிக்கிறோம். எல்லோரும் ஒரு மனதாக அந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அவர் வந்தால் தான் இந்த தேசத்தினுடைய முகம் தேசத்தினுடைய குரல் என்பதை இந்திய நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அனைவருடைய விருப்பமும் அவர்தான் வழி நடத்த வேண்டும். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைவராக என இவ்வாறு அவர் பேசினார்.

 

MUST READ