Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36ஆவது முறையாக நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36ஆவது முறையாக நீட்டிப்பு!

-

 

'செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது செப்.20- ல் தீர்ப்பு வழங்கப்படும்' என அறிவிப்பு!
File Photo

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 36ஆவது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!

கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி பலமுறை தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவலை வரும் ஜூன் மாதம் 04- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆப்பிள் ஐபோன் பயனர்களின் கவனத்திற்கு!

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ