செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன் இன்று (ஜூலை 14) மாலை 03.30 மணிக்கு தீர்ப்பளித்துள்ளார்.
ஈபிஎஸ் குணத்தை தொண்டர்கள் புரிந்து கொண்டனர்- ஓபிஎஸ்
ஆட்கொணர்வு மனுவை விசாரித்த மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தனது தீர்ப்பில், “செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது; விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3
செந்தில் பாலாஜி சட்டத்தை மதிக்க வேண்டும்; குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜி குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். அமலாக்கத்துறை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி தீர்ப்புடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது அவசியம். அமர்வு நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டப் பிறகே உத்தரவு பிறப்பித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.