முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஜெயம் ரவி, நித்யா மேனன் கூட்டணியின் ‘காதலிக்க நேரமில்லை’….. ரிலீஸ் எப்போது?
கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் 14- ஆம் தேதி அன்று சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (பிப்.28) காலை 10.30 மணி தீர்ப்பளித்துள்ளார்.
காக்கி சட்டையுடன் காரில் வந்து இறங்கிய ரஜினி….. ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள்!
அதில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, செந்தில் பாலாஜி மீதான வழக்கை மூன்று மாதத்திற்கு முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லிக்கு உத்தரவிட்டுள்ளார்.