செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யும் வரை யுத்தம் தொடரும்”- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பணப்பரிமாற்ற வழக்கில் தனக்கு எதிராக போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்!
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று (ஜன.03) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 08- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.