அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்.19) தீர்ப்பளிக்கிறது.
பள்ளி சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி, தொடர்ந்த வழக்கை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது.
இதய அறுவைச் சிகிச்சைச் செய்திருப்பதால், உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இதனை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வந்தார்.
“ஆடியோ லாஞ்ச் ரத்து ஏன்?, படத்தில் ஆபாச வசனம் இடம் பெறாது”- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், ஆதாரங்களை அளித்து விடுவார் என அமலாக்கத்துறைத் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில், இன்று (அக்.19) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.