Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; சட்ட ரீதியாகச் சந்திப்போம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

“ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; சட்ட ரீதியாகச் சந்திப்போம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

-

- Advertisement -

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு கூட்டணியின் ‘மாமன்னன்’ திரை விமர்சனம்!

அப்போது செய்தியாளர்கள், “செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கியுள்ளாரே?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இதை நாங்கள் சட்ட ரீதியாகச் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

மூன்று வயது சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

இதனிடையே, தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ